
ஜனாதிபதி தேர்தலை பின்போடுவதற்கு தாம் ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லையென்கிறார் மஹிந்த ராஜபக்ச.
பாணந்துறையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே மஹிந்த இவ்வாறு தெரிவித்துள்ளதுடன் ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆகக்குறைந்தது ஏப்ரல் 4ம் திகதி தகவல் கிடைத்துள்ளமை உறுதியாகியுள்ளதாகவும் இந்நிலையில் அரசு என்ன செய்து கொண்டிருந்தது எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதேவேளை, தாஜ் சமுத்ராவில் முக்கிய பிரமுகர் ஒருவர் இருந்ததனாலேயே அங்கு திட்டமிட்டபடி குண்டு வெடிக்கவில்லையென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment