ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் என்பது பொய்; 559 பேர் தான்: மைத்ரி! - sonakar.com

Post Top Ad

Tuesday 4 June 2019

ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் என்பது பொய்; 559 பேர் தான்: மைத்ரி!


ஈஸ்டர் தாக்குதலையடுத்து ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுவதில் எந்த உண்மையுமில்லையெனவும் 559 பேரைத் தான் இதுவரை மேலதிக விசாரணைகளுக்காகத் தடுத்து வைத்திருப்பதாகவும் தெரிவிக்கிறார் இலங்கை சோசலிஷ 'ஜனநாயக' குடியரசின் தலைவர் மைத்ரிபால சிறிசேன.


நேற்றைய தினம் இப்தார் நிகழ்வொன்றை நடாத்திய நிலையில், அங்கு வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இதேவேளை, 2289 பேர் கைது செய்யப்பட்டு 1655 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் பொலிஸ் பேச்சாளர் உத்தியோகபூர்வ தகவல் வெளியிட்டிருந்தமையும் அவசர கால சட்டத்தின் கீழ் மேலும் பலர் கைது செய்யப்பட்டுத் தொடர்பின்றி இருப்பதாக பல குடும்பங்கள் முறையிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment