பள்ளிவாசல்களை தீவிரமாக பரிசோதிப்பதில் தவறில்லை: NFF முசம்மில் - sonakar.com

Post Top Ad

Thursday 16 May 2019

பள்ளிவாசல்களை தீவிரமாக பரிசோதிப்பதில் தவறில்லை: NFF முசம்மில்


நாட்டின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு அனைத்து பள்ளிவாசல்களையும் தீவிர பிரசோதனைக்குட்படுத்துவதில் தவறேதும் இல்லையென தெரிவிக்கிறார் தேசிய விடுதலை முன்னணியின் முசம்மில்.வட-கிழக்கு யுத்த காலத்தில் தேசிய அளவில் அனைத்து மத வழிபாட்டுத்தளங்களும் இவ்வாறு சோதனையிடப்பட்டதாகவும் தற்போதைய சூழலில் சிங்கள மக்களுக்க இருக்கும் அச்சத்தை போக்க இவ்வாறு செய்வது அவசியம் எனவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

பெரும்பாலும் அனைத்து பள்ளிவாசல்களிலும் சோதனையிடப்பட்ட அதேவேளை, பல பள்ளிவாசல்களை அண்டிய பகுதிகளில் திட்டமிட்ட வகையில் புதைத்து வைக்கப்பட்டதாகக் கருதப்படும் கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கடந்த 13, 14ம் திகதிகளில் முஸ்லிம்கள் மீது வன்முறைத் தாக்குதல்களும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment