லண்டன் தூதரகத்தின் இப்தார் நிகழ்வை பகிஷ்கரிக்கும் முஸ்லிம்கள்! - sonakar.com

Post Top Ad

Thursday, 16 May 2019

லண்டன் தூதரகத்தின் இப்தார் நிகழ்வை பகிஷ்கரிக்கும் முஸ்லிம்கள்!


இம்மாதம் 22ம் திகதி லண்டனில் இயங்கும் ஐக்கிய இராச்சியத்துக்கான இலங்கைத் தூதரகம் ஏற்பாடு செய்துள்ள இப்தார் நிகழ்வை புறக்கணிக்க பெரும்பாலான இலங்கை முஸ்லிம்கள் சார்பு அமைப்புகள் தீர்மானித்துள்ளன.நாட்டின் பல பாகங்களிலும் இயங்கும் இலங்கை முஸ்லிம்கள் சார்பு அமைப்புகள் இது தொடர்பில் ஒரு நிலைப்பாட்டில் இருக்கின்ற அதேவேளை, ஒவ்வொரு தடவையும் நெகிழ்வுடன் நடந்து கொண்டுள்ளோம், இம்முறையாவது எமது எதிர்ப்பை ஜனநாயக வழியில் பதிவு செய்ய வேண்டிய தேவையை புறக்கணிக்க முடியாது என தெரிவிக்கின்றனர்.

எனினும், வழமையாக தூதரகத்தின் செல்லப் பிள்ளைகளாக இயங்கும் அமைப்பொன்று மாத்திரம் 'முடிவெடுக்க' தயங்குவதாகவும், இலங்கை தூதரகத்துக்கு அரசாங்கம் வழங்கிய 'பணம்' விரயமாகி விடும் என கருத்து தெரிவித்து வருவதாகவும் அறியமுடிகிறது.

இப்பின்னணியில், அவ்வாறு சமூகப் பிளவை உருவாக்கினால் இதற்கு தூதரகத்துக்கு முன்னால் ஒன்று கூடி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவும் பிறிதொரு குழுவினர் தயாராகி வருவதாக அறியமுடிகிறது.

நாட்டில் இயங்கும் பிரதான மக்கள் சார்பு அமைப்புகள் ஏலவே தாம் பகிஷ்கரிக்கப் போவதாக தெரிவித்துள்ளதுடன் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், மக்கள் சக்திகளை ஒன்று திரட்டும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள SLMDI எழுத்து மூலம் உத்தியோகபூர்வமாக இதனை அறிவித்துள்ளது.

இச்சூழ்நிலையில்,  சர்ச்சைக்குரிய அமைப்பின் தற்போதைய தலைவரை கடந்த 20 மணி நேரத்துக்கு முன்பாக (இச்செய்தி எழுதப்படும் போது) சோனகர்.கொம் எழுத்து மூலம் தொடர்பு கொண்டும் இது வரை பதில் எதுவும் வழங்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment