ஹம்பாந்தோட்டயில் புத்தர் சிலைகள் உடைப்பு; பொலிஸ் பாதுகாப்பு! - sonakar.com

Post Top Ad

Friday 31 May 2019

ஹம்பாந்தோட்டயில் புத்தர் சிலைகள் உடைப்பு; பொலிஸ் பாதுகாப்பு!


ஹம்பாந்தோட்ட, ருவன்புர பகுதியில் அமைந்துள்ள பௌத்த மத்திய நிலையத்தின் முன்னிருந்த இரு புத்தர்  சிலைகள் இனந்தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டு உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இப்பின்னணியில் பிரதேசத்தில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் சற்று பதற்றம் நிலவியுள்ளது.

புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டதன் பின்னணியில் உள்ளோர் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிசார் தெரிவிக்கின்ற அதேவேளை, ஈஸ்டர் தாக்குதலையடுத்து பல பள்ளிவாசல்களை அண்டிய இடங்களிலும் கூரிய ஆயுதங்கள் புதைக்கப்பட்டு பாதுகாப்பு தரப்புக்கு தகவல் வழங்கப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment