மார்க்கத் தலைமைகளை இழிவு படுத்துவதை நிறுத்துங்கள்: அசாத் சாலி வேண்டுகோள்! - sonakar.com

Post Top Ad

Friday 17 May 2019

மார்க்கத் தலைமைகளை இழிவு படுத்துவதை நிறுத்துங்கள்: அசாத் சாலி வேண்டுகோள்!சமூக வலைத்தளங்கள் ஊடாக மார்க்கத் தலைமைகளை இழிவுபடுத்தும் வகையிலான ஒலிப்பதிவுகள், தகவல்களை வெளியிடுவதையும் அவற்றைப் பகிர்வதையும் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி.அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி பற்றி தனிப்பட்ட நண்பர்கள் குழாம் ஒன்றில் பகிரப்பட்ட கருத்தொன்றை அதனைப் பதிவிட்டவர் அழித்து விட்டுள்ள போதிலும் அவ்விடைவெளியில் பிரதியெடுத்துக் கொண்ட நபர் ஒருவரால் குறித்த ஒலிப்பதிவு ஐந்து நாட்களின் பின்னர் பரப்பப்பட்டு, அதற்கு வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டு வெளியிடப்பட்டதன் பின்னணியில் உருவான சர்ச்சை குறித்து முஸ்லிம் குரல் வானொலிக்கு நேற்றிரவு (16) தெளிவுபடுத்துகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி விசமிகளால் மேற்கொள்ளப்பட்ட இப்பிரச்சாரத்தில் ஆளுனரோடு குறித்த நபர் காணப்படும் படம் ஒன்றை இணைத்து அவரது செயலாளர் என கூறப்பட்டிருக்கின்றமை பொய் என சம்பந்தப்பட்ட இரு தரப்பும் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்நிலையிலேயே, இவ்வாறு தவறான பிரச்சாரங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து பொறுப்பான முறையில் சமூகம் நடந்து கொள்ள வேண்டும் என ஆளுனர் அசாத் சாலி வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment