வத்தளை, ஹுனுபிட்டி பகுதியில் கடற்படையினரின் வீதித் தடுப்பினையும், கட்டளையையும் மீறி வேகமாகச் சென்ற இரு கார்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில், வத்தளை பகுதியைச் சேர்ந்த 34 வயது சாமர அசங்க எனும் நபர் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய காரில் பயணித்த சட்டத்தரணியொருவர் காயமுற்றுள்ளதாக விமானப் படையினர் விளக்கமளித்துள்ளனர்.
அவசரகால சட்டத்தின் பின்னணியில் நாடளாவிய ரீதியில் தேடல்கள் இடம்பெற்று வருவதுடன் வீதிச் சோதனைகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment