யாழ்: பயங்கரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் - sonakar.com

Post Top Ad

Friday 31 May 2019

யாழ்: பயங்கரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்


யாழ் முஸ்லீம் சமூகத்தின் ஏற்பாட்டில் பயங்கரவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (31) மதியம் 1.00 மணியளவில் முஸ்லிம் கல்லூரி வீதியும் - நாவலர் வீதியும் இணையும் புதுப்பள்ளிச் சந்தியில்  முன்னெடுக்கப்பட்டது.குறித்த ஆர்ப்பாட்டமானது  ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு எதிர்ப்புத்தெரிவிக்கும் வகையிலும் அவ் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட ஏப்ரல் 21 தாக்குதலுக்கும் கண்டனம் வெளியிட்டு குறித்த தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும்  வகையில் அந்நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனைவர் மீதும் அரசை சட்டத்தின் மூலம் தண்டணையை வழங்கக் கோரியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இதன் போது பல்வேறு கோஷங்களையும் பதாதைகளையும் எழுப்பி போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-பாறுக் ஷிஹான்

No comments:

Post a Comment