இலங்கையில் இனவாதம் இல்லை: ஐ.நா அறிக்கைக்கு இலங்கை மறுப்பு - sonakar.com

Post Top Ad

Sunday 26 May 2019

இலங்கையில் இனவாதம் இல்லை: ஐ.நா அறிக்கைக்கு இலங்கை மறுப்பு


இலங்கையில் சிறுபான்மை மக்கள் இன ரீதியாக இலக்கு வைக்கப்பட்டு தாக்குதல்கள் நடைபெற்று வரும் தொடர்ச்சியைக் கண்டித்திருந்த இரு ஐ.நா அமைப்புகளின் அறிக்கையை மறுதலித்துள்ளது இலங்கை.இலங்கையில் இடம்பெற்றுள்ள எந்த வன்முறைக்கும் 'சமயம்' ஒரு காரணமாக அமைந்திருக்கவில்லையென ஐ.நாவுக்கான நிரந்தர பிரதிநிதி Dr ரொஹான் பெரேரனா இவ்வாறு மறுதலித்துள்ளார்.

இலங்கையில் முஸ்லிம்  - கிறிஸ்தவ சமூகங்கள் இலக்கு வைக்கப்பட்டு தாக்குதல்கள் இடம்பெறுவதோடு பௌத்த தேசியவாத வளர்ச்சியின் விளைவே இதுவென அண்மைய முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையையடுத்து இரு ஐ.நா நிறுவனங்கள் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

drminkandy said...

All over Sri lanka racism so in must give security

Post a Comment