மக்கள் வரி கட்ட வழியில்லாமல் தவிக்கிறார்கள்: யாப்பா - sonakar.com

Post Top Ad

Tuesday 21 May 2019

மக்கள் வரி கட்ட வழியில்லாமல் தவிக்கிறார்கள்: யாப்பாதொடர்ச்சியாக எடுத்து வரும் சர்வதேச கடன்களை அடைக்க மக்கள் மீதான வரிச்சுமை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், தீவிரவாத தாக்குதலையடுத்து பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியடைந்திருப்பதாகவும் இதனால் மக்கள் வரி கட்ட முடியாமல் தத்தளித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார் அநுர பிரியதர்சன யாப்பா.அரசாங்கம் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பொறுப்பற்ற விதத்தில் பல நாடுகளுடன் பாதுகாப்பு உடன்படிக்கைகளை செய்து வருவதாகவும் இவை எதுவும் நாட்டுக்கு நன்மை சேர்க்கப் போவதில்லையெனவும் யாப்பா விசனம் வெளியிட்டுள்ளார்.

மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றுவதன் மூலம் தப்பித்துக் கொள்ளலாம் என்று கருதிய அரசு இன்று அதாள பாதாளத்துக்குள் வீழ்ந்திருப்பதாக அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Abdul said...

Very very good then now they should feel how to effects everyone.

Post a Comment