
2014 முதல் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளின் நாட்டின் தலைவர் வெளிநாடு செல்லும் பாரம்பரியத்துக்கமைவாக குளியாபிட்டி, மினுவங்கொட பற்றி எரியும் போது மைத்ரிபால சிறிசேன சீனா சென்றிருந்தார்.
வழமையாகத் தன்னை ஒரு தேசப்பற்று மிக்க சமாதானத் தந்தையாகவே வர்ணித்து வரும் மைத்ரிபால சிறிசேன, தற்சமயம் மயான அமைதியைக் கடைப்பிடித்து வருகிறார்.
பல கோடிக்கணக்கான பொருளாதாரத்தை இழந்துள்ள முஸ்லிம் சமூகம் அரசியல் ரீதியாக முடக்கப்பட்டுள்ள நிலையில், தமது இலக்கை அடைந்து கொண்டுள்ள பேரினவாதம் இன்றைய விடியலை சற்று நிதானமாக ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment