நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டு பிரஜைகளை தீவிரமாக ஆராய உத்தரவு - sonakar.com

Post Top Ad

Monday, 13 May 2019

நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டு பிரஜைகளை தீவிரமாக ஆராய உத்தரவு


நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டுப் பிரஜைகள், குறிப்பாக மாலைதீவினர் மற்றும் நீண்டகாலம் தங்கியிருப்பதற்கான விசா விண்ணப்பிப்போரை தீவிர சோதனைக்குட்படுத்த பாதுகாப்பு உயர் மட்டம் உத்தரவு பிறப்பித்துள்ளது.முஸ்லிம் விவகார அமைச்சூடாக 200க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர், எகிப்து, ஈரான், பங்களதேஷ், சவுதி பிரஜைகள் இவ்வாறு விசா பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இந்நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

அண்மையில் மாதம்பை இஸ்லாஹியாவில் தங்கியிருந்த எகிப்தியர் விசா முடிவுற்றிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு, பின்னர் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னணியில் விடுதலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment