ஜனாதிபதி விசாரணைக் குழுவுக்கு BBS இடமிருந்து 'உளவுத் தகவல்' - sonakar.com

Post Top Ad

Monday 20 May 2019

ஜனாதிபதி விசாரணைக் குழுவுக்கு BBS இடமிருந்து 'உளவுத் தகவல்'



இலங்கையில் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் இயங்கும் தீவிரவாத அமைப்புகள், ஐ.எஸ் அமைப்புடனான தொடர்புகள் பற்றி தமது அமைப்பு பல வருடங்களாக சேகரித்துள்ள தகவல்களை ஜனாதிபதி விசாரணைக்குழுவுக்கு வழங்க ஞானசார சம்மதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



வெலிகடை சென்றிருந்த நிலையில் இடம்பெற்ற ஞானசார - மைத்ரி சந்திப்பின் போதே இவ்வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இதேவேளை, ஞானசாரவை விரைவில் விடுவிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகவும் இம்மாதத்துக்குள் அவர் விடுவிக்கப்படாவிட்டால் பாரிய அளவில் போராட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் பொது பல சேனா பயங்கரவாத அமைப்பு தெரிவிக்கிறது.

முன்னராக சுதந்திர தினத்தின் போதும், வெசக் தினத்தின் போதும் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்ட சிறைக்கைதிகளின் பட்டியலில் ஞானசாரவின் பெயரும் எதிர்பார்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment