இலங்கையில் முதலீடு மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை ஊக்குவிக்கும் முகமாக அவ்வகையினருக்கு பல தடவைகள் வந்து செல்லக்கூடிய வகையில் Multiple Entry விசா நடைமுறையினை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சர் வஜிர அபேவர்தனவின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில் விரைவில் இதற்கேற்ப குடிவரவு சட்டவிதிகளில் மாற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
தற்சமய் சுற்றுலாப்பயணிகளுக்கு ஒரு மாத காலமே விசா வழங்கப்படுகின்ற நிலையில் அதையும் ஆறு மாதமாக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment