இன்று முதல் ரயில்களில் பெண்களுக்கான பிரத்யேக இட ஒதுக்கீடு! - sonakar.com

Post Top Ad

Friday 8 March 2019

இன்று முதல் ரயில்களில் பெண்களுக்கான பிரத்யேக இட ஒதுக்கீடு!இன்று முதல் கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வேலை - நேர ரயில் சேவைகள் சிலவற்றில் பெண்களுக்கான பிரத்யேக இட ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதனடிப்படையில், பெண்கள் மாத்திரம் பயணிக்கக் கூடிய பகுதிகள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் வேலை நேரத்துக்கான சேவைகளில் இவ்வொதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை தொடர்ந்து அதனை தேசிய சேவைகளிலும் அறிமுகப்படுத்தவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவிக்கிறது.


ரயில்களில் பெண்கள் எதிர்நோக்கும் அச்சுறுத்தல் மற்றும் அசௌகரியங்களைக் கருதியே இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளதுடன் மீரிகம, ரம்புக்கம, மாஹோவிலிருந்து காலையில் கொழும்பு வரும் ரயில்களிலும் கல்கிஸ்ஸ - புத்தளம் (சமுத்ரா தேவி) ரயிலிலும், மாத்தறை - கொழும்பு (காலை 5) ரயில் சேவையிலும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment