அ'சேனை மாணவர்கள் சென்ற பேருந்து விபத்து: ஒருவர் மரணம் - sonakar.com

Post Top Ad

Tuesday 5 March 2019

அ'சேனை மாணவர்கள் சென்ற பேருந்து விபத்து: ஒருவர் மரணம்


அட்டாளைச்சேனை கல்வியயற் கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்து, கடுகண்ணாவயில் குடைசாய்ந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 30 பேர் வரை காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


செவ்வாயிரவு 9 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ள அதேவேளை, காயப்பட்டவர்கள் கடுகண்ணாவ மற்றும் மாவனல்லை வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற அதேவேளை இது தொடர்பில் பல்வேறு ஊகப் பிரச்சாரங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment