எயார் இந்தியா விமானப் பணியாளர்கள் தமது அறிவிப்புகளின் இறுதியில், தேசப்பற்றை வெளிக்காட்டும் நிமித்தம் 'ஜெய் ஹிந்த்' என சொல்ல வேண்டும் எனும் கட்டாய அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம், விமானத்தில் மேற்கொள்ளப்படும் அறிவுறுத்தல்களின் இறுதியில் சிறு இடைவெளிக்குப் பின் ஜெய் ஹிந்த் என சொல்லியே அறிவிப்பை முடிக்க வேண்டும் என பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏலவே மட்டமான சேவை மற்றும் கவனக்குறைவு, பழமைவாதம் போன்ற குற்றச்சாட்டுகளின் பின்னணியில் எயார் இந்தியா சேவைகளை பாவனையாளர்கள் புறக்கணித்து வரும் நிலையில் இவ்வறிவிப்பு அரசியல் தேவைகளுக்காக விடுக்கப்பட்டுள்ளதாக அவதானிகள் சுட்டிக்காட்டுகின்ற அதேவேளை சமூக வலைத்தளங்களில் இவ்விடயம் கேலிக்குட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment