பெரும்பான்மை சமூகத்துக்கு விரோதமாக நடக்க மாட்டோம்: ஹக்கீம் - sonakar.com

Post Top Ad

Tuesday 5 March 2019

பெரும்பான்மை சமூகத்துக்கு விரோதமாக நடக்க மாட்டோம்: ஹக்கீம்எதிர்கட்சியினர் அரசியலமைப்பு  என்ற விடயத்தை வைத்து இந்நாடு முழுவதையும் காட்டிக் கொடுப்பதாக  விமர்சனம் செய்து வருகின்றனர். எமது அரசாங்கம் ஒரு போதும் எந்தச் சந்தர்ப்பத்திலும் பெரும்பான்மையின மக்களுக்கு அரசியலமைப்பு சீர்திருத்த விடயத்தில்  விரோதமாக செயற்படமாட்டார்கள் என்று என்னால் சான்று பகர முடியும்.


நாங்கள் இந்த அரசிலமைப்பு பரிந்துரைக் குழுவில் இருப்பதன் காரணமாக பௌத்த சமயத்திற்குரிய   மதிப்புக்கு முராணாக ஒரு போதும் இடம்பெறாது. அப்படியானதொரு மாற்றம் இடம்பெறப் போவதில்லை. அதேவேளை புதிய பஜட்டின் மூலம் நாடுபூராகவும் சுத்தமான குடிநீரற்ற 1000 கிராமங்களுக்கு நீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக என்று நகர திட்டமிடல் நீர்வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷாவின்  வேண்டுகோளின் பிரகாரம் ஹிரியாலைத் தேர்தல் தொகுதியில் பக்மீகொல்ல – கும்பலங்க பிரதான வீதியினை 50 மில்லியன் ரூபா செலவில் காபட் வீதியாக புனர் நிர்மாணம் செய்யும் வேலைத்திட்டத்திற்கான அங்குரார்ப்பண வைபம் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட நகர திட்டமிடல் நீர்வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.


இந்நிகழ்வில் ஹிரியாலை தேர்தல் தொகுதி ஐ. தே. க. அமைப்பாளர்  உதய விஜயதாச, ஸ்ரீ. மு. காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

-இக்பால் அலிNo comments:

Post a Comment