நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை தலைவராக டாக்டர் லலித் - sonakar.com

Post Top Ad

Friday 8 March 2019

நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை தலைவராக டாக்டர் லலித்


கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் கீழான நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக டாக்டர் லலித் நிமல் நியமிக்கப்பட்டிருந்தார்.


இந்நிலையில், அவரது நியமனக் கடிதம் இன்று அமைச்சு செயலகத்தில் வைத்து அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் வழங்கி வைக்கப்பட்டது.


அமைச்சில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் ரஞ்ஜித் அசோகவும் கலந்து கொண்டார்.

-RB

No comments:

Post a Comment