
2015 - 2018 வரையிலான ஊழல்கள் தொடர்பில் விசாரணை நடாத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவில் அமைச்சர்கள் ராஜித மற்றும் தலதா அத்துகோறளவுக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உதய கம்மன்பிலவின் பிவித்துரு ஹெல உறுமய சார்பிலேயே இம்முறைப்பாடுகள் முன் வைக்கப்பட்டுள்ளன.
தலதா அத்துகோறள வெளிநாட்டுத் தொழில்வாய்ப்பு அமைச்சராகக் கடமையாற்றிய காலத்தில் 1500 மில்லியன் ரூபா மோசடி செய்திருப்பதாகவும் ராஜிதவின் மாபியாக்களுக்கு உதவுவதாகவும் கூறி இம்முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment