முஸ்லிம் தனியார் சட்டம்: முஸ்லிம் MPக்களிடமே இறுதித் தீர்வு - sonakar.com

Post Top Ad

Friday, 8 February 2019

முஸ்லிம் தனியார் சட்டம்: முஸ்லிம் MPக்களிடமே இறுதித் தீர்வு



முஸ்லிம் தனியார் சட்டத்தின் இறுதி தீர்மானங்களை மேற்கொள்ளும் பொறுப்பு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமே இருப்பதாக தெரிவிக்கிறார் நீதியமைச்சர் தலதா அத்துகோறள.

இப்பின்னணியில், திருத்தச் சட்டத்தை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டியது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களே எனவும் இரு வேறு பரிந்துரைகள் முன் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவை குறித்து ஆராய்ந்து ஒற்றுமையாக முடிவை அறிவிக்க வேண்டும் எனவும் தலதா வலியுறுத்தியுள்ளார்.



முன்னாள் நீதியரசர் சலீம் மர்சுப் தலைமையில் முன் வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு மாற்றீடாக ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா மற்றும் ஜம்மியத்துல் உலமா இணைந்து முன் வைத்துள்ள பரிந்துரைகள் பேசு பொருளானதையடுத்து இரு வேறு நிலைப்பாடுகள் இருப்பதனால் முடிவொன்றை மேற்கொள்ள முடியாத சூழல் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையிலேயே, நேற்றைய தினம் நாடாளுமன்ற கட்டிடத்தில் இரு தரப்புடனும் இடம்பெற்ற விசேட சந்திப்பில் வைத்து தலதா அத்துகோறள இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment