வர்த்தகர்கள் கடத்தல்: பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது! - sonakar.com

Post Top Ad

Monday, 18 February 2019

வர்த்தகர்கள் கடத்தல்: பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது!


ரத்கம பகுதியைச் சேர்ந்த இரு வர்த்தகர்கள் பொலிஸ் சீருடையில் வந்தவர்களால் ஜனவரி மாதம் கடத்தப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் தென் மாகாண விசேட விசாரணைப்பிரிவில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வந்த விசாரணைகளின் பின்னணியில் இன்ஸ்பெக்டர் கபில நிசாந்த என அறியப்படும் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொழிலதிபர்களை இலக்கு வைத்து கடத்தல் மற்றும் பணய நாடகங்கள் ஆங்காங்கு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment