இறக்குமதி வரி மோசடி: பசால் நூர்தீனுக்கு விளக்கமறியல்! - sonakar.com

Post Top Ad

Monday 18 February 2019

இறக்குமதி வரி மோசடி: பசால் நூர்தீனுக்கு விளக்கமறியல்!


இறக்குமதி வரி மோசடியின் பின்னணியில் கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவரை எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம்.பங்களதேஷிலிருந்து ஆடைத்துணிகள் இறக்குமதி செய்வதாகக் கூறி, புகையிலை இறக்குமதி செய்ததுடன் இதனால் அரசுக்கு 40 மில்லியன் ரூபா இழப்பை ஏற்படுத்தியிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பசால் அஹமட் நூர்தீன் எனும் குறித்த நபர், மிளகு மற்றும் பாக்கு இறக்குமதி செய்து ஏற்றுமதி செய்வதிலும் முறைகேடுகளை செய்திருப்பதாகவும் வெளிநாடுகளிலிருந்து இவ்வாறு பொருட்களை இறக்குமதி செய்து அவற்றை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வர்த்தகம் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நபருக்கு முதலில் பிணை வழங்கப்பட்டிருந்த போதிலும் சட்டத்தை மீள ஆராய்ந்த பின் பின் மீண்டும் விளக்கமறியலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment