வக்பு சபையின் 'ஆமை வேகம்': அரபுக் கல்லூரிகள் ஒன்றியம் காட்டம்! - sonakar.com

Post Top Ad

Tuesday 26 February 2019

வக்பு சபையின் 'ஆமை வேகம்': அரபுக் கல்லூரிகள் ஒன்றியம் காட்டம்!


ஆமை வேகத்தில் இயங்கும் வக்பு சபையை நம்பி அரபுக்கல்லூரிகள் அனைத்தையும் பதிந்து செயற்பட மறுத்துள்ளது அரபுக் கல்லூரிகள் ஒன்றியம்.நாட்டில் இயங்கும் அனைத்து அரபுக் கல்லூரிகளையும் வக்பு சபையின் கீழ் பதிவதற்கு முஸ்லிம் விவகார அமைச்சர் ஹலீம் விடுத்திருந்த வேண்டுகோளின் பின்னணியில் இது தொடர்பில் ஆராயும் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

எனினும், வக்பு சபை ஊடாக எந்தப் பிரச்சினைக்கும் உடன் தீர்வு காண முடியாத நிலையே காணப்படுகின்றதன் பின்னணியில் அரபுக் கல்லூரிகளையும் அதன் கீழ் கொண்டுவர முடியாது என அரபுக்கல்லூரிகளின் ஒன்றியம் மறுத்துள்ளது.  இதேவேளை, அரபுக்கல்லூரிகளின் ஒன்றியம் தற்சமயம் சிறப்பான முறையில் தமது அமைப்பில் அங்கம் வகிக்கும் கல்லூரிகளை கண்காணித்து, முன்னேற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் இதன் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment