கடன் செலுத்தாத பந்துல; வீட்டை ஏலமிடப் போகும் வங்கி! - sonakar.com

Post Top Ad

Tuesday 26 February 2019

கடன் செலுத்தாத பந்துல; வீட்டை ஏலமிடப் போகும் வங்கி!


பான் ஏசியா வங்கியில் பெற்ற 1 கோடியே 20 லட்சம் ரூபாய் கடனை செலுத்தாது இழுத்தடிக்கும் மஹிந்த அணியின் முக்கியஸ்தர் பந்துல குணவர்தனவின் நுகேகொட வீட்டை பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்ய உத்தரவிட்டுள்ளது கொழும்பு வர்த்தக நீதிமன்றம்.அல்பா டிஜிட்டல் பிரைவேட் லிமிட்டட் எனும் நிறுவனத்தின் பேரில் பெறப்பட்டுள்ள கடன் தொகைக்கு பந்துலவின் நுகேகொட, ஜம்புகஸ்முல்ல வீதியில் உள்ள வீடு பிணையாக வைக்கப்பட்டுள்ளது.  எனினும், தான் தெரியாமல் பிணைப் படிவத்தில் கையொப்பமிட்டு விட்டதாக விளக்கமளித்துள்ளார் பந்துல.

ஆயினும், முன்னாள் நிதியமைச்சர், ஆசிரியர், அனுபவமுள்ள அரசியல்வாதி அவ்வாறு செய்திருக்க வாய்ப்பில்லையென தீர்மானித்துள்ள நீதிமன்றம், கடன் தொகைக்குப் பகரமாக வீட்டை ஏலத்தில் விற்பனை செய்ய அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment