கிண்ணியா: விளையாட்டு கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு - sonakar.com

Post Top Ad

Tuesday, 19 February 2019

கிண்ணியா: விளையாட்டு கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு


திருகோணமலை ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபின் 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட 35 விளையாட்டு கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று காலை கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் கிண்ணியா நகர பிதா நளீம்,பிரதேச சபை உதவி தவிசாளர் பாஸித், நகரசபை உறுப்பினர் ரிஸ்வி,பிரதேச சபை உறுப்பினர் தௌபீக் ,வேட்பாளர் கால்தீன்,விளையாட்டு கழக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

-Sabry

No comments:

Post a Comment