கொள்ளைச் சம்பவம் ஒன்றின் பின்னணியில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தாது விடுவிப்பதற்கு வெலிகடை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு 25,000 ரூபாய் லஞ்சம் கொடுக்க முனைந்த நபர் ஒருவர் இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.
தன்னிடம் லஞ்சப் பேரம் நடாத்தப்படுவதாக குறித்த பொலிஸ் அதிகாரி லஊ ஆணைக்குழுவுக்கு வழங்கிய தகவலின் பின்னணியில் இக்கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மைக்காலமாக பாதுகாப்பு படைகளில் பணியாற்றுபவர்கள் பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்பு பட்டு வரும் நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment