அங்கமுகமுவ முஸ்லிம் கனிஷ்ட பாடசாலையில் புதிய கட்டிடங்கள் - sonakar.com

Post Top Ad

Thursday, 14 February 2019

அங்கமுகமுவ முஸ்லிம் கனிஷ்ட பாடசாலையில் புதிய கட்டிடங்கள்


பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு கையடக்க தொலைபேசிகளை வாங்கிக் கொடுப்பதைத் தவிர்த்து வாசிப்பதற்காக புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள். வாசிப்புத்தான் மனிதனை முழு மனிதனாக மாற்றும். இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த விஞ்ஞானி  அப்துல் கலாம் அவர்கள் பின்தங்கிய கிராமத்தில் பிறந்தவராக இருந்தாலும் அவர் ஜனாதிபதியாவும் விஞ்ஞானியாகவும் விளங்கினார். மனிதர்கள் தம்மைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையிலும் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. எனவே பின்தங்கிய கிராமமாக இருந்தாலும் திறன்வாய்ந்த  மாணவர்கள் சமூகத்தினர் உள்ளனர். அவர்களுடைய திறமைகளை ஊக்குவிப்பதும் அவர்களைப் பாராட்டுவதும் அதற்கு உதவி புரிவதும் அவசியமாகும் என்று குருநாகல் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளரும் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினருமான எஸ். சஹாப்தீன் தெரிவித்தார்.

கல்கமுவ தேர்தல் தொகுதியில் அங்கமுகமுவ முஸ்லிம் கனிஷ்ட பாடசாலையில் 60 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட அதிபர் அலுவலகம் மற்றும் மூன்று வகுப்பறைகளைக் கொண்ட கட்டிடத் தொகுதி திறப்பு விழாவும் இல்லவிளையாட்டுப் போட்டியும்  அதிபர் என். பீ. எம்.  இர்பான் தலைமையில் இடம்பெற்றது. அந்நிகழ்வில் விசேட அதிதியாகக் கலந்து கொண்ட குருநாகல் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளரும் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினருமான எஸ். சஹாப்தீன் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், விளையாட்டுத் துறையானது  ஒற்றுமையை ஏற்படுத்தக் கூடியவையாகும். உலகிலுள்ள அனைத்து நாடுகளும் விளையாட்டுத்துயை ஊக்குவித்து வருகின்றன. அந்தவகையில் இலங்கை அரசாங்கம் மாணவர்ளின் விளையாட்டுத்துறையை மேம்படுத்தவற்கான  அதிகளவிலான பங்களிப்பைச் சென்து வருகின்றது. 

பிள்ளைகள் பாடசாலையில் கல்வி பயிலுவது ஆறு மணித்தியாலயங்களே  ஆகும். அதிகளவிலான கால நேரத்தை பிள்ளைகள் வீட்டிலேயே கழிக்கின்றனர். கூடுதலாக பிள்ளைகள் பெற்றோர்களின் அரவணைப்பிலே உள்ளர்.  பெற்றோர் தம் பிள்ளைகள் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே கல்வி என அழியாதது. வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படாமல்  இருப்பது. இத்தகைய சிறப்புக்களையுடைய கல்விச் செல்வத்தை இந்தப் பிரதேசத்திலுள்ள ஒவ்வொரு பெற்றோர்களும் மதித்து தம் பிள்ளைகளுக்கு வழங்குவதற்கு ஆர்வம் காட்டுதல் வேண்டும்.

எமது கிராமத்தின் முன்னேற்றம் கல்வியிலேயே தங்கியுள்ளது. இப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களை சரியான முறையில் வழி நடத்துவதன் மூலம்  எமது கிராமம் கல்வியில்த தலை  சிறந்த ஒரு கிராமமாக மாற்றியமைக்கமுடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தக் கட்டிடத் தொகுதி ஊர் மக்களின்   மூலம் சேகரிக்கப்பட்ட ரூபா  30 இலட்சம் செலவிலும் வடமேல் மாகாண சபையினால் வழங்கப்பட்ட ரூபா 30 இலட்சம் செலவிலுமாக இந்தக் கட்;டிடத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டது. இந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் ஜுபிட்டர் இல்லம் 664 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தையும் வீனஸ் இல்லம் 640 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது. 

இதில் குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியும் சமூக சேவையாளருமான சாபி சிஹாப்தீன், முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும் கூட்டுறவுத் துறை உதவி ஆணையாளருமான நஷீர், குளியாப்பிட்டிய பிரதேச சபை உப  தலைவர் இர்பான் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

-இக்பால் அலி


No comments:

Post a Comment