மதுஷ் கைது: நாடாளுமன்றில் விவாதிக்க அழைக்கும் ஜே.வி.பி - sonakar.com

Post Top Ad

Thursday, 14 February 2019

மதுஷ் கைது: நாடாளுமன்றில் விவாதிக்க அழைக்கும் ஜே.வி.பி


அரசியல் புள்ளிகளோடு தொடர்புகளைப் பேணி வருவதோடு இலங்கையில் குற்றச்செயல்களை வழி நடாத்தும் முக்கிய பாதாள உலக நபராகக் கருதப்பட்டு வந்த மாகந்துரே மதுஷ் டுபாயில் கைதாகி தன் சகாக்களுடன் 14 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இது பற்றி நாடாளுமன்றில் விவாதிக்க அழைப்பு விடுத்துள்ளது மக்கள் விடுதலை முன்னணி.ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் நாலிந்த திசாநாயக்க இதனை வலியுறுத்தியுள்ள அதேவேளை இலங்கையில் 80க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகளுக்கு மதுஷோடு தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கொலை, கொள்ளைச் சம்பவங்கள் பலவற்றின் காரணகர்த்தாவாக செயற்பட்ட மதுஷ், தற்போது டுபாயில் போதைப் பொருள் பாவனையின் பின்னணியில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment