க.பொ.த சாதாரண தர பரீட்சை பாடமாக 'சட்டம்' : அகில - sonakar.com

Post Top Ad

Monday 11 February 2019

க.பொ.த சாதாரண தர பரீட்சை பாடமாக 'சட்டம்' : அகிலஆறாம் தரத்திலிருந்து சட்டத்தை பாடசாலைப் பாடத்திட்டத்தில் இணைத்து, க.பொ.த சாதாரண தர பரீட்சையிலும் மேலதிக பாடமாக இணைத்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம்.மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள், சுற்றுப்புறச் சூழல், போக்குவரத்து உட்பட்ட முக்கிய சட்ட திட்டங்களை உள்ளடக்கியதாக இப்பாடத்திட்டம் அமையவுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் சட்டத்தை மதிக்கும் பிரஜைகளை உருவாக்குவதே இதன் அடிப்படையெனவும் எதிர்கால தலைமுறையின் அபிவிருத்தியை கருத்திற்கொண்டே இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.No comments:

Post a Comment