மதுஷின் வாழ்க்கை பற்றி அறிய மனைவியிடம் விசாரணை! - sonakar.com

Post Top Ad

Tuesday 12 February 2019

மதுஷின் வாழ்க்கை பற்றி அறிய மனைவியிடம் விசாரணை!


டுபாயில் கைதாகியுள்ள பிரபல பாதாள உலக பேர்வழி மாகந்துரே மதுஷின் வாழ்க்கை பற்றி மேலதிக விபரங்களை அறிய அவரது முதல் மனைவியை அழைத்து விசாரணை நடாத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.தென் மாகாணத்துக்குப் பொறுப்பான டி.ஐ.ஜி ரவி விஜேகுணவர்தனவின் அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டே இவ்விசாரணை நடாத்தப்பட்டுள்ளது.

டி.ஐ.ஜியின் உத்தரவுக்கமைய மாவரல பொலிசார் மதுஷின் மனைவியை அழைத்துச் சென்றதாகவும் விசாரணையின் போது மதுஷின் திருமண வாழ்க்கை மற்றும் மனைவிக்குத் தெரிந்த ஏனைய விபரங்கள் பல கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment