டுபாய்: அமல் பெரேராவின் புதல்வர் தப்பிக்கொள்ளும் சாத்தியம்! - sonakar.com

Post Top Ad

Tuesday 12 February 2019

டுபாய்: அமல் பெரேராவின் புதல்வர் தப்பிக்கொள்ளும் சாத்தியம்!


டுபாயில் மாகந்துரே மதுஷோடு கைதான பாடகர் அமல் பெரேராவின் புதல்வர் நதிமாலின் இரத்த பரிசோதனையின் பின் அவர் போதைப் பொருள் உட்கொண்டதற்கான அறிகுறியில்லையென்பது தெளிவாகியுள்ளதாக அவர்கள் சார்பாக ஆஜராகியுள்ள சட்டத்தரணி தெரிவிக்கிறார்.


இப்பின்னணியில் நதிலாலை விடுவிக்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள அவர், ஏனையோரின் இரத்த பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளிவரவில்லையெனவும் அமல் மற்றும் நதிலால், கலைஞர்களாகவே குறித்த நிகழ்வில் கலந்து கொண்டதாக நிரூபிக்கும் முயற்சிகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

டுபாய் பொலிசாருக்கு இவர்களின் பாடல்களின் ஒலிப்பதிவுகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் கலைஞர்கள் என்ற ரீதியிலேயே குறித்த இருவரும் அங்கு கலந்து கொண்டிருந்ததாகவும் சட்டத்தரணி உடுல் பிரேமரத்ன தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment