ரஞ்சன் சொல்வது உண்மைதான் போலுள்ளது: சுசில் - sonakar.com

Post Top Ad

Tuesday 19 February 2019

ரஞ்சன் சொல்வது உண்மைதான் போலுள்ளது: சுசில்கபினட் அமைச்சர்களும் 'கொகைன்' பாவிப்பதாக ரஞ்சன் ராமநாயக்க சொல்வது உண்மை தான் என தானும் நம்புவதாக தெரிவிக்கிறார் சுசில் பிரேமஜயந்த.நாட்டின் நலனை முன் வைத்து முடிவுகளை எடுக்க வேண்டிய அமைச்சரவைக் கூட்டங்கள் பெரும்பாலும் தனி மனித நலன் பேணும் வகையிலான முடிவுகளுடனேயே நிறைவேறுவதைப் பார்க்கும் போது உண்மையில் போதைப் பொருள் உட்கொண்டுவிட்டு அமைச்சரவைக் கூட்டங்கள் நடாத்தப்படுகிறதா எனும் கேள்வியெழுவதாகவும் அவர்  விளக்கமளித்துள்ளார்.

இதேவேளை, தான் ஏலவே 24 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலை ஒப்படைத்திருப்பதாகக் கூறும் ரஞ்சன், தனது பட்டியலில் மஹிந்த அணியைச் சேர்ந்தவர்களும் உள்ளார்கள் என தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment