கடந்த வருடம் நவம்பர் மாதம், பன்னிபிட்டிய இரத்தினக் கல் வியாபாரி ஒருவருடைய வீட்டுக்குள் பொலிஸ் சீரூடையில் புகுந்து 7 பில்லியன் ரூபா பெறுமதியான இரத்தினக் கல்லொன்றை கொள்ளையடித்துச் சென்ற வெதிகந்தே கசுன் என அறியப்படும் கசுன் தனஞ்சய இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த சந்தர்ப்பத்தில் இரத்தினக் கல்லை கொள்வனவு செய்யச் சென்றிருந்த அவுஸ்திரிய பிரஜையை கைவிலங்கிட்டு மடக்கி விட்டு, குறித்த கொள்ளை நடாத்தப்பட்டிருந்தது.
இப்பின்னணியில் ஏலவே மாத்தற மல்லியென அறியப்படும் நபர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது கசுன் கைதாகியுள்ளமையும் இக்கொள்ளையை மாகந்துரே மதுஷே திட்டமிட்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment