இவ்வாண்டுக்குள் புதிய அரசு மலரும்: ஜனாதிபதி! - sonakar.com

Post Top Ad

Thursday 31 January 2019

இவ்வாண்டுக்குள் புதிய அரசு மலரும்: ஜனாதிபதி!


இவ்வாண்டுக்குள் புதிய அரசாங்கம் பதவியேற்கும் என தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.மஹிந்த பெரமுனவின் உற்ற நண்பனாக மாறியுள்ள ஜனாதிபதிக்கு அக்கட்சியினர் பலத்த ஆதரவை வெளியிட்டு வருகின்றனர். எனினும், மைத்ரியை ஜனாதிபதி வேட்பாளராக்குவதற்கு மஹிந்த அணியினர் தொடர்ந்தும் எதிர்ப்பை வெளியிட்டும் வருகின்றனர்.

இந்நிலையில், இன்று சு.க கொழும்பு அலுவலகத்தில் வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாண்டுக்குள் புதிய அரசு உருவாகும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் ஜனாதிபதி. இவ்வருடம் தேர்தல்களுக்கான வருடம் என அனைத்து தரப்பினரும் தெரிவித்து வருகின்ற போதிலும் மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்ந்தும் தள்ளிப் போகும் சாத்தியக்கூறே நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Naeem Farook said...

Are you goung to make topple the govrnment again ?

Post a Comment