மே 31ம் திகதிக்குள் தேர்தல் இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை: தயாசிறி - sonakar.com

Post Top Ad

Thursday 31 January 2019

மே 31ம் திகதிக்குள் தேர்தல் இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை: தயாசிறி


மாகாண சபை தேர்தலை மே 31ம் திகதிக்குள் நடாத்த ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கையை அரசு நிராகரிக்குமாக இருந்தால் நீதிமன்றத்தை நாடப் போவதாக தெரிவிக்கிறார் தயாசிறி ஜயசேகர.பழைய தேர்தல் முறைமையை மீண்டும் அமுலுக்குக் கொண்டு வருவதற்கான பிரேரணையை துரிதமாக சபையில் சமர்ப்பித்து அரசாங்கம் தேர்தலை நடாத்த முடியும் எனவும் தெரிவித்துள்ள அவர், குறித்த பிரேரணைக்கு நாடாளுமன்றில் அனைவரும் ஆதரவளிப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சரே புதிய முறைமை வேண்டும் என அடம் பிடித்ததாகவும் அச்சிக்கலை அவர்களே தீர்க்க வேண்டும் எனவும் சுஜீவ சேனசிங்க அண்மையில் தெரிவித்திருந்தமையும் ஐக்கிய தேசியக் கட்சியினர் ஜனாதிபதி தேர்தலை முதலில் நடாத்துவதற்கு முயற்சிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment