
முன்னாள் பிரதம நீதியரசரும் மஹிந்த விசுவாசியுமான சரத் என். சில்வாவை எதிர்வரும் 7ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பு விடுத்துள்ளது உச்ச நீதிமன்றம்.
நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதாக அவருக்கு எதிராக தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கின் பின்னணியிலேயே இவ்வழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்சவின் நெருங்கிய சகாவாக மாறியுள்ள சில்வா பெரமுன கூட்டங்களில் ஏறி அரசியல் கருத்துரைத்து வருகின்ற நிலையில் பொதுக் கூட்டம் ஒன்றில் வைத்து அவர் நீதிமன்றை அவமதிக்கும் வகையில் பேசியதாக சுட்டிக்காட்டியே வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment