வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாக வத்தளை பகுதியில் பலரை ஏமாற்றி வந்த இந்திய பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
30 வயது குறித்த நபர், வெளிநாடுகளில் வேலை வாய்ப்பைப் பெற்றுத்தருவதாகக் கூறி சுமார் 10 லட்சம் ரூபா வரை வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைதான நபருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் பெப்ரவரி 4ம் திகதி வழக்கு விசாரணைக்கு தேதி குறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment