
எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தை ஏலவே பொறுப்பேற்றுள்ள மஹிந்தவுக்கு எதிர்க்கட்சித் தலைவருக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தலம் 18ம் திகதியளவில் கிடைக்கும் என பெரமுனவின் வாசுதேவ நானாயக்கார தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எனும் தனது கட்சியில் உறுப்புரிமை எடுத்துள்ளதை பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ச தொடர்ந்தும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினராகவே செயற்படுகிறார்.
இந்நிலையில், எதிர்க்கட்சி அந்தஸ்த்தும் உத்தியோகபூர்வ வாசஸ்தலமும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கே வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment