கொலை, போதைப்பொருள் விற்பனை போன்ற விவகாரங்களில் தொடர்புள்ள 'வெலே சாரங்க' என அறியப்படும் பாதாள உலக பேர்வழியின் சகா ஆமி நாலகவையும் மனைவியையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
28 வயதுடைய குறித்த நபரே சாரங்கவின் போதைப் பொருள் வர்த்தகம் மற்றும் கொந்தராத்துகளை செய்து வருவதாக தெரிவிக்கின்ற பொலிசார் கைதாகும் போது சந்தேகநபரிடம் 5.2 கிராம் ஹெரோயின் இருந்ததாகவும் தகவல் வெளியிட்டுள்ளனர்.
பேலியகொட பொலிசில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment