1958 - 2014 வரையான கால கட்டத்தில் குறிப்பாக ரணசிங்க பிரேமதாச மற்றும் மஹிந்த ராஜபக்ச உட்பட அனைத்து ஆட்சியாளர்களும் இணைந்து கொழும்பில் குறைந்த வருமானத்தில் உள்ளவர்களுக்கென 56 வருடங்களில் 9889 வீடுகளே கட்டிக் கொடுத்துள்ளதாக தெரிவிக்கின்ற சம்பிக்க ரணவக்க, நடைமுறை அரசு 2019 நிறைவுக்குள் 15,799 வீடுகளை மக்களுக்குக் கையளித்திருக்கும் என தெரிவிக்கிறார்.
தெமட்டகொட பகுதியில் வீட்டுத் தொகுதியொன்றை கையளிக்கும் நிகழ்வில் வைத்தே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், அடுத்த வருடத்துக்குள் 20,000 வீடுகள் நிர்மாணித்து மக்கள் பாவனைக்காக வழங்கப்படும் எனவும் தகவல் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, தமது அரசு மக்களுக்கு நிறைய சேவைகளை செய்வதனாலேயே திட்டுகளும், விமர்சனங்களும் வருவதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment