மஹிந்த இனியும் ஏமாறக் கூடாது: வெல்கம! - sonakar.com

Post Top Ad

Monday, 21 January 2019

மஹிந்த இனியும் ஏமாறக் கூடாது: வெல்கம!


மஹிந்த ராஜபக்ச இனியும் யாரிடமும் ஏமாறாமல் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என தெரிவிக்கிறார் குமார வெல்கம.



மஹிந்த அணியில் தொடர்ந்தும் மஹிந்தவின் தலைமைத்துவத்தை மாத்திரமே ஆதரித்து கருத்து வெளியிட்டு வரும் வெல்கம, மஹிந்தவை சுற்றியுள்ளவர் அவர் மூலம் பயனடைந்து வருவதாக தெரிவித்து வருகிறார்.

ஒக்டோபர் மாதம் மஹிந்தவின் திடீர் பிரதமர் நியமனத்தையும் ஆதரிக்க மறுத்த அவர், இனியும் மஹிந்த ஏமாறக் கூடாது என தெரிவிப்பதுடன் அடுத்த ஜனாதிபதி வேட்பாளரகவும் மஹிந்த ராஜபக்சவே நியமிக்கப்பட வேண்டும் என தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment