வீதியில் கைவிடப்பட்டிருந்த இரண்டு மாத குழந்தை மீட்பு - sonakar.com

Post Top Ad

Monday 21 January 2019

வீதியில் கைவிடப்பட்டிருந்த இரண்டு மாத குழந்தை மீட்புமட்டக்களப்பு மாவட்டம், கிரான் பிரதேசத்தில் வீதியில் வீசப்பட்டு கிடந்த பெண் சிசு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.30 மணியளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.30 மணியளவில் கிரான் மத்திய வித்தியாலயத்திற்கு முன்பாக குழந்தையின் அழுகுரல் கேட்டதும் அயலவர்கர் வந்து பார்த்த போது குழந்தையொன்று கைவிடப்பட்ட நிலையில் கிடப்பதைக்கண்டு கிராம சேவகரின் உதவியுடன் வாழைச்சேனை பெரிஸாரிடம் ஒப்படைத்ததுடன் வாழைச்சேனை பொலிஸார் குழந்தையை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.நேற்று இரவு கிரான் பிரதேச செயலகப்பிரிவுக்குற்பட்ட கிரான் மத்திய வித்தியாலயத்திற்கு முன்பாக பெண் குழந்தை ஒன்றினை அப்பிரதேச கிராம உத்தியோகஸ்தர் இ.அச்சுதன் அவர்கள் வாழைச்சேனை பொலிஸாரின் உதவியுடன் மீட்டு வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த குழந்தை அறுவது நாட்களுக்கும் தென்நூறு நாட்களுக்கும் இடைப்பட்ட குழந்தையாக இருக்கலாம் என்று வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் தெரிவித்ததுடன் இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-முர்ஷித்

No comments:

Post a Comment