கோடிக்கணக்கில் இழப்பு: ஸ்ரீலங்கன் அலட்சியம்! - sonakar.com

Post Top Ad

Saturday 19 January 2019

கோடிக்கணக்கில் இழப்பு: ஸ்ரீலங்கன் அலட்சியம்!



2006 - 2018 வரை ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் பல கோடி ரூபாக்கள் இழப்பை சந்தித்துள்ளமை தொடர்பிலான தகவல்கள் வெளியாகி வருகின்றன.


ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா நிறுவன ஊழல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் குத்தகைக்கு எடுத்த 14 விமானங்களை சரியான நேரத்தில் திருப்பியொப்படைக்காததன் பின்னணியில் மாத்தித் 1.72 பில்லியன் ரூபா இழப்பு தொடர்பில் விசாரணையின் போது தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தற்சமயம் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கான விமான சேவைப் பயணக்கட்டணத்தை அதிகமாக அறவிடுவதால் ஸ்ரீலங்கன் மேலும் இழப்பையும் வாடிக்கையாளர்களின் அதிருப்தியையும் சந்தித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment