இன்னும் முழுமை பெறவோ, நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவோ, அங்கீகரிக்கப்படவோ இல்லாத அரசியல் சட்டத்தை அடிப்படையாக வைத்து பலர் அரசியல் செய்து கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.
ஒரு சிலர் நாடு துண்டாடப்பட்டு விட்டதாகவும் கூட வங்குரோத்து அரசியல்வாதிகள் பிரச்சாரம் செய்து வருவதாகவும் தெரிவிக்கின்ற அவர், நாடாளுமன்றை அரசியலமைப்பு சபையாக மாற்றி இது தொடர்பில் பல்வேறு கட்ட வாத - விவாதங்களும் இடம்பெற்றோ நகல் வரை வந்திருப்பதாகவும் நாடாளுமன்றில் மூன்றிரலிரண்டு பெரும்பான்மை கிடைத்தாலன்றி அரசியல் யாப்பு நிறைவேறப்போவதில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யதார்த்த நிலை இவ்வாறிருக்க அரசியலுக்காக இல்லாத அரசியல் சட்டத்தை வைத்து போலிப் பிரச்சாரம் செய்யப்படுவதாக ரணில் விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment