தேசிய அரசாங்கம் சரி வராது: சந்திரசேன! - sonakar.com

Post Top Ad

Sunday, 27 January 2019

தேசிய அரசாங்கம் சரி வராது: சந்திரசேன!


ஐக்கிய தேசியக் கட்சி - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து 'நல்லாட்சி' என்ற பெயரில் உருவாக்கிய தேசிய அரசாங்கம் தோல்வியில் முடிந்துள்ளதை ஜனாதிபதியே தெரிவித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் ஒரு தேசிய அரசு அமைவதற்குத் தாம் ஒரு போதும் ஆதரிக்கப் போவதில்லையெனவும் அவ்வாறு ஒரு விடயம் சரிப்பட்டு வராது எனவும் தெரிவித்துள்ளார் அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன.அமைச்சுப் பதவிகளை அதிகரித்து கட்சிப்பூசலை நிவர்த்தி செய்யவே ஐக்கிய தேசியக் கட்சி முயல்வதாக டலஸ் அழகப்பெரும ஏலவே குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இத்திட்டத்தை முற்றாக எதிர்ப்பதாக சந்திரசேன தெரிவிக்கிறார்.

எனினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மஹிந்த எதிர்ப்பாளர்கள் தொடர்ந்தும் அரசில் இணைவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment