மாவனல்லை விவகாரம்: விமல் வீரவன்ச கூடுதல் அக்கறை! (video) - sonakar.com

Post Top Ad

Friday, 28 December 2018

மாவனல்லை விவகாரம்: விமல் வீரவன்ச கூடுதல் அக்கறை! (video)


மாவனல்லை விவகாரத்தில் விமல் வீரவன்ச தரப்பு கூடுதல் அக்கறை காட்டி வருவதுடன் தொடர்ச்சியாக அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறது.

கண்டி சம்பவமும் அரசின் தேவைகளுக்கமைகாவே இடம்பெற்றதாக விமல் வீரவன்ச தெரிவிப்பதோடு பொலிஸ் உளவாளி நாமல் குமார போன்றோரின் ஈடுபாடு அதனை நிரூபிப்பதாக தெரிவிக்கிறார். மாவனல்லை விவகாரம் தொடர்பில் ஏலவே அவரது கட்சியின் உதயசாந்த குணசேகர இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த நிலையில் இன்று விமல் வீரவன்சவும் இது தொடர்பில் இன்று கருத்து வெளியிட்டுள்ளார்.சிங்கள - முஸ்லிம் தரப்பு இன முறுகலில் ஈடுபடக் கூடாது எனக் கூறி ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் விமல் வீரவன்ச உரையாற்றியுள்ள அதேவேளை, அவரது கட்சி இணையத்தளம் இனவாதத்தைத் தூண்டும் வகையிலான செய்திகளை தொடர்ந்தும் வெளியிடுகின்றமையும் நாளைய தினம் மாவனல்லையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

விமல் வீரவன்சவின் உரை:

No comments:

Post a Comment