வடபுலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 31ம் திகதிக்குள் நிதியுதவிகள் வழங்கப்படும் என வாக்குறுதியளித்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
இன்றைய தினம் கிளிநொச்சி சென்ற ரணில் அங்கு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இடைக்கால பட்ஜட்டிலேயே அரசு இயங்க வேண்டிய சூழ்நிலையிருக்கின்ற போதிலும் அவசர நிலைமைகளுக்கான நிதியுதவியை வழங்குவதில் தடையேதுமில்லையென ரணில் இங்கு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment