ஹரின் - மலிக் அமைச்சுப் பதவிகளை 'பகிர்ந்து' கொண்ட UNP - sonakar.com

Post Top Ad

Friday 28 December 2018

ஹரின் - மலிக் அமைச்சுப் பதவிகளை 'பகிர்ந்து' கொண்ட UNP


அமைச்சர்கள் ஹரின் பெர்னான்டோ மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோர் தமக்கு வழங்கப்பட்டிருந்த கூடுதல் அமைச்சுப் பொறுப்புகளிலிருந்து இராஜினாமா செய்து அதனை தமது கட்சிக்காரர்கள் அஜித் பெரேரா மற்றும் சுஜீவ சேனசிங்கவுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.


இப்பின்னணியில் இன்று வெளியான வர்த்தமானியில் ஹரின் பெர்னான்டோ மற்றும் மலிக் சமரவிக்ரம, முறையே விளையாட்டுத்துறை மற்றும் சர்வதேச வர்த்தகம் தவிர்ந்த ஏனைய பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது குறித்து விளக்கமளித்துள்ள ஹரின், முன்னராக ஜனாதிபதி முன்னிலையில் அனைத்து பொறுப்புகளுக்கும் தாம் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் கபினட் அந்தஸ்த்தற்ற அமைச்சர்கள் நியமனத்திற்காக பொறுப்புகளை விட்டுக்கொடுத்திருந்ததாகவும் அதனாலேயே விளையாட்டுத்துறை தவிர்ந்த ஏனைய பொறுப்புகள் நீக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment