பௌத்த மதத்துக்கே முன்னுரிமை: ரணில் வாக்குறுதி! - sonakar.com

Post Top Ad

Friday, 28 December 2018

பௌத்த மதத்துக்கே முன்னுரிமை: ரணில் வாக்குறுதி!இலங்கையில் பௌத்த மதத்துக்கான முன்னுரிமை பாதுகாக்கப்படும் என அஸ்கிரிய மகாநாயக்கர்களிடம் வாக்குறுதியளித்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.புத்தர் சிலை உடைப்பு விவகாரம் தொடர்பாக துரிதமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ள  அவர், அரசியலமைப்பின் ஒன்பதாம் பிரிவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட மாட்டாது எனவும் பௌத்த முன்னுரிமை பேணப்படும் எனவும் வாக்குறுதியளித்துள்ளார்.

இலங்கை அரசியல் சட்டத்தின் அடிப்படையில் ஆட்சியாளர்கள் பௌத்த முன்னுரிமையைப் பேணும் 'அதேவேளை' ஏனைய சமயங்களைச் சார்ந்தவர்களின் உரிமைகளையும் பேணுதல் கடமையென்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment